| ADDED : ஜூலை 24, 2024 06:09 AM
புவனகிரி : கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே பு.மணவெளி மாந்தோப்பு தெருவை சேர்ந்தவர் பூபதி,70; கணவர் இறந்த நிலையில் தனிமையில் வசித்து வருகிறார். இவரது மகன்கள் மூவர் சென்னையிலும், இருவர் வெளி நாட்டிலும் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று வந்த பூபதி, வீட்டு திண்ணையில் படுத்து துாங்கினார். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் ஓட்டை பிரித்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடித்து சென்றனர்.காலையில் எழுந்து பார்த்தபோது பொருட்கள் கொள்ளை போனது குறித்து புவனகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விரல் ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி தடயங்களை சேகரித்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.