உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவன், மனைவி தகராறு வன்கொடுமை சட்டத்தில் வழக்கு

கணவன், மனைவி தகராறு வன்கொடுமை சட்டத்தில் வழக்கு

திட்டக்குடி: திட்டக்குடி அருகே கலப்புத் திருமணம் செய்து கொண்ட கணவன், மனைவி இடைடையே ஏற்பட்ட தகராறில் மனைவி புகாரின் பேரில், கணவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.திட்டக்குடி அடுத்த நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி மகள் ஷாலினி,27. இவர் திட்டக்குடியில் வசித்து வந்த தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவரை காதலித்து 2019ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் மகள் உள்ளார். கடந்த 28ம் தேதி, ஷாலினி வீட்டில் கணவருடன் இருந்தபோது, அன்பழகனின் தந்தை தங்கராஜன் மற்றும் அண்ணன் தண்டபாணி ஆகியோர் காரில் நெடுங்குளத்திற்கு வந்தனர். இருவரும் ஷாலினியை ஆபாசமாக திட்டி தாக்கினர். கணவர் அன்பழகன், ஷாலினியுடன் வாழ விருப்பமில்லை எனக்கூறிவிட்டு தந்தை மற்றும் அண்ணனுடன் காரில் சென்றுவிட்டார். இதுகுறித்து ஷாலினி அளித்த புகாரின் பேரில் அன்பழகன்,27, தங்கராஜன்,68, தண்டபாணி மற்றும் அசோக்குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீது திட்டக்குடி போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அன்பழகனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ