உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மீது கார் மோதி கணவன், மனைவி பலி குறிஞ்சிப்பாடி அருகே சோகம்

பைக் மீது கார் மோதி கணவன், மனைவி பலி குறிஞ்சிப்பாடி அருகே சோகம்

வடலுார் : குறிஞ்சிப்பாடி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் கணவன்,மனைவி உயிரிழந்தனர்.கடலுார் மாவட்டம், வடலுார் குமரன் நகரை சேர்ந்தவர் மலர்வண்ணன், 55; குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடூர் அகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, தனது மனைவி விஜயலதா, 48; வுடன், வடலுாரில் இருந்து புவனகிரிக்கு பைக்கில் சென்றார்.குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர் அகரம் கிராமம் அருகே சென்றபோது, எதிரே, ஓய்வு பெற்ற ஆசிரியர் தில்லை நடராஜன், 64; ஓட்டி வந்த மாருதி ஆல்டோ கார் மோதியது.விபத்தில், ஆசிரியர் மலர்வண்ணன், அவரது மனைவி விஜயலதா மற்றும் காரை ஓட்டி வந்த தில்லை நடராஜன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர்.அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலுார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, மலர்மன்னன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். தொடர்ந்து புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது மனைவி விஜயலதாவும் உயிரிழந்தார்.காரை ஓட்டி வந்த தில்லைநடராஜன், சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்து குறித்து மலர்வண்ணன் மகன் அம்ரீஷ் கொடுத்த புகாரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை