உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இருளில் பெண்ணையாற்று பாலம் மின் விளக்குகள் பொருத்தப்படுமா?

இருளில் பெண்ணையாற்று பாலம் மின் விளக்குகள் பொருத்தப்படுமா?

கடலுார்: கடலுார் - புதுச்சேரி செல்லும் பெண்ணையாற்று பாலங்களில் மின் விளக்குகள் இல்லாமல் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொது மக்கள் அச்சமடைகின்றனர். கடலுார் - புதுச்சேரி சாலையில் நகர எல்லையில் தென் பெண்ணையாறு ஓடுகிறது. இதற்காக ஏற்கனவே ஒரு பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடக்கிறது. இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலை விரிவு படுத்தும் பொருட்டு இந்த பழைய பாலத்திற்கு அருகிலேயே மற்றொரு புதிய பாலம் கட்டப்பட்டது. புதிய பாலத்தில் போக்குவரத்து துவங்கியுள்ளது. ஒரே நேரத்தில் 3 வாகனங்கள் தாரளமாக கடந்து செல்ல முடியும்.பழைய பாலத்தில் மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளதே தவிர இரவு நேரங்களில் விளக்கு எரிவதில்லை. இவ்வளவு பெரிய பாலத்தில் ஒரே ஒரு மின் விளக்கு மட்டுமே எரிகிறது.புதிய பாலத்தின் மின் விளக்குகள் இதுவரை அமைக்கவே இல்லை. இதனால் இரவில் பெண்ணயைாற்று பாலம் இருண்டு கிடக்கிறது. இதனால், இரவில் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். தேசிய நெடுங்சாலைத்துறை கோடிக்கணக்கில் செலவழித்து பாலம் கட்டியும் மின் விளக்குகள் இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது.எனவே பெண்ணையாற்றில் உள்ள 2 பாலங்களிலும் மின் விளக்குகள் பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ