உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இலக்கிய மன்ற தொடக்க விழா

இலக்கிய மன்ற தொடக்க விழா

சிதம்பரம்: சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடந்தது.தலைமையாசிரியர் கண்ணகி தலைமை தாங்கினார். ஆசிரியர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியர் ஞானகுமார் பங்கேற்று,தமிழ் இலக்கிய மன்றத்தை துவக்கி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பேசினார்.விழாவில்,திடக்கழிவு மேலாண்மை குறித்து விழுப்பணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில் 400 மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.உதவி தலைமை ஆசிரியர் செல்வகணபதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை