உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிவபுரியில் காத்திருப்போர் கூடம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

சிவபுரியில் காத்திருப்போர் கூடம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அடுத்துள்ள சிவபுரியில் புதிய காத்திருப்போர் கூடத்தை பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். சிதம்பரம் அருகே சிவபுரி ஊராட்சிக்குட்பட்ட தென் சிவபுரி கிராமத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 6 லட்சம் செலவில் புதிய காத்திருப்போர் கூடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர் அமுதா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், ஒன்றிய குழு துணை தலைவர் முடிவண்ணன், ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் சேதுமாதவன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மாணவரணி செயலாளர் ரவிசந்திரன் வரவேற்றார்.ஊராட்சி தலைவர் அன்புசெல்வன், செங்குட்டுவன், ஒன்றிய பொருளாளர் சுந்தரம், மாவட்ட பிரதிநிதி மோகன், ஊராட்சி தலைவர் மகேஷ், கிளை செயலாளர் ராதா, லெலின், ஞானம், ராஜேந்திரன், பாண்டியன் பங்கேற்றனர்.ஊராட்சி துணைத் தலைவர் முத்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !