உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நவீன கருத்தரங்கு கட்டடம் திறப்பு

நவீன கருத்தரங்கு கட்டடம் திறப்பு

சிதம்பரம் : சிதம்பரம், அண்ணாமலை பல்கலைகழத்தில், முன்னாள் மாணவர்கள் சார்பில், நவீன கருத்தரங்கு கட்டடம் புதுப்பிக்கப்பட்டு, திறக்கப்பட்டது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கட்டடவியல் துறையில், 1977ல் பயின்ற முன்னாள் மாணவர்கள், சார்பில் அலுமினி கருத்தரங்கு அறை நவீனமாக புதுப்பிக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது. புல முதல்வர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். துறைத் தலைவர் பூங்கோதை முன்னிலை வகித்தார். கருத்தரங்கு அறையை பதிவாளர் சிங்காரவேல் திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் மாணவர் பழனிசாமி பேசினார். பேராசிரியர்கள் பழனிவேல் ராஜா, ரமேஷ், மோகன், பாலகுமார், ஞானகுமார், செந்தில்குமார், தாமோதரன், சிவப்பிரகாசம், ஏழிசைவல்லபி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் மணிகுமாரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி