உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

பண்ருட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

பண்ருட்டி: பண்ருட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருவதிகையில் நடந்தது.விழாவிற்கு ரோட்டரி சங்க தலைவர் பாரதிதாசன் தலைமை தாங்கினார். மண்டல உதவி ஆளுநர் ஐஸ்வர்யா ரவிசேகர் முன்னிலை வகித்தார். கடந்த ஆண்டு செயலர் செந்தில்குமார், பொருளாளர் நரேஷ் வரவேற்றனர். 5 புதிய உறுப்பினர்களுக்கு உதவி ஆளுநர், ரோட்டரி பேட்ச் அணிவித்து சங்கத்தில் இணைத்தார். புதிய தலைவராக பாலமுருகன், செயலாளராக அருண்ராஜ், பொருளாளராக சுதாமன் பொறுப்பேற்றனர்.நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், தஞ்சாவூர் ஜெயக்குமார், ரோட்டரி முன்னாள் நிர்வாகிகள் முத்துக்குமரப்பன், காமராஜ், மதன்சந்த், பாண்டு, ஏழுமலை, மதிவாணன், ராமலிங்கம், வியாபாரிகள் சங்க தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்பன், மூத்த உறுப்பினர் சண்முகம், புதுச்சேரி மணி, உதவி ஆளுநர்கள் ஸ்டெல்லா, கடலுார் வெங்கடேசன், ஒய்வு பெற்ற துணை ஆட்சியர் ராஜவேல், ஆர்.டி.ஒ.பன்னீர்செல்வம், வி.கே.மார்ட் சதாசிவம், சக்திவேல், ராஜா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ