உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பம் ஆலையில் கரும்பு அறவை துவக்கம்

நெல்லிக்குப்பம் ஆலையில் கரும்பு அறவை துவக்கம்

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலையில் சிறப்பு பட்ட கரும்பு அறவை துவக்க விழா நடந்தது.ஆலையின் இணை உபதலைவர் பாண்டியன், இயந்திரத்தில் கரும்பை போட்டு அறைவையை துவக்கி வைத்தார். பொது மேலாளர் கேசவன், இணை பொது மேலாளர் நடராஜன், துணை பொது மேலாளர்கள் சிவராமன், மதிவாணன், தேவராஜ், மரியா பிரான்சிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இணை உபதலைவர் பாண்டியன் கூறுகையில், இந்த பட்டத்தில் 4 லட்சம் டன் கரும்பு அறவை செய்ய திட்டமிட்டுள்ளோம். கரும்புக்கு மட்டுமே நிலையான விலை கிடைக்கிறது. அறுவடை முடிந்த 15 நாட்களுக்குள் ஒரே தவணையில் பணம் வழங்குகிறோம். புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கரும்பு பயிர் செய்ய வேண்டும். ஆலை மூலம் வழங்கும் பல்வேறு மான்யங்களை பயன்படுத்தி அதிகளவு கரும்பு பயிரிட்டு, விவசாயிகள் பயன் பெறலாம் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை