உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரியில் தொடரும் திருட்டு சம்பவங்கள்

புவனகிரியில் தொடரும் திருட்டு சம்பவங்கள்

புவனகிரி : புவனகிரி பகுதியில் தொடர் குற்ற சம்பவங்கள் நடந்தபோதும், குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.புவனகிரி அருகே சித்தேரியில் கடந்த மாதம் கோவிலில் மூன்று கலசங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். கீரப்பாளையம் திருப்பணிநத்தத்தை சேர்ந்த அரசு ஊழியர் வேல்முருகன் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது. அதன் பின் ஒரே இரவில் நான்கு கோவில்களில் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் உண்டியலில் இருந்த பணம், நகை உள்ளிட்டவை திருடப்பட்டது.கடந்த சில தினங்களுக்கு முன் நாய் கடித்து மருத்துவமனைக்கு வரும் போது மயங்கி விழுந்தவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் திருடப்பட்டது. அடுத்த நாள் கிளாவடிநத்தம் கோவிலில் உண்டியலை உடைத்து பணம், நகை திருடப்பட்டது. இது குறித்து தனித்தனி புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்துள்ள நிலையில், குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.இதனால், புவனகிரி பகுதியில் திருட்டு சம்பவங்கள் மற்றும் அடிதடி உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துள்ளது. எனவே, எஸ்.பி.,அதிரடி நடவடிக்கை எடுத்து, புவனகிரியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை