உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பருவநிலை மாற்றத்தால் வாந்தி பேதி அதிகரிப்பு

பருவநிலை மாற்றத்தால் வாந்தி பேதி அதிகரிப்பு

மந்தாரக்குப்பம் : கம்மாபுரம் பகுதிகளில், பருவ நிலை மாற்றத்தால் வாந்தி, பேதி அதிகரிப்பால் கிராமங்களில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கம்மாபுரம் வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம், வெப்ப காற்று அதிகரிப்பு, சமீபத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட சிதோஷண நிலை காரணமாக பொதுமக்களுக்கு வாந்தி, பேதி, ஜீரண கோளாறு ஏற்பட்டு வருகிறது. கம்மாபுரம் மற்றும் சுற்றுபகுதி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.எனவே பொதுமக்களுக்கு வாந்தி, பேதியை தடுக்க கம்மாபுரம் வட்டார பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ