உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுதந்திர தின விழா கொண்டாட்டம்...

சுதந்திர தின விழா கொண்டாட்டம்...

சிதம்பரம்: நெல்லு கடை பிள்ளையார் கோவில் தெரு, இளமையாக்கினார் கோவில் தெருவில் காங்., சார்பில் சுதந்திர தின விழா நடந்தது.விழாவிற்கு நகர தலைவர் மக்கின் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் குமார் வரவேற்றார். சண்முகசுந்தரம், சின்ராஜ், சிவசக்தி ராஜா, டேனியல் ராஜ், வேல்முருகன் முன்னிலை வகித்தனர்.மாநில செயலாளர் சித்தார்த்தன் தேசிய கொடி ஏற்றினார். மாநில செயலாளர் ஜெயச்சந்திரன் காந்தி சிலைக்கும், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா, காமராஜர் சிலைக்கும், நகர செயல் தலைவர் குமார், ராஜிவ் சிலைக்கும் மாலை அணிவித்தனர்.சிதம்பரம், அண்ணாமலை நகர் பேரூராட்சியில் அலுவலகத்தில் பேரூராட்சி சேர்மன் பழனி தேசிய கொடியேற்றினார். அப்போது பேரூராட்சி இளநிலை உதவியாளர் இளமதி, துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கடலுார் மாவட்ட காங்., சார்பில் சுதந்திர தின விழா புதுவண்டிப்பாளையத்தில் கொண்டாடப்பட்டது. ஓ.பி.சி., மாவட்ட துணை தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். காங்., மாநில செயலாளர் சந்திரசேகர் தேசிய கொடியேற்றி மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் செந்தில்குமார் தேசிய கொடி ஏற்றி, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கமிஷனர் மல்லிகா, துணைத் தலைவர் முத்துக்குமரன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

பண்ருட்டி

பண்ருட்டி அடுத்த குடியிருப்பு ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, தட்சணாமூர்த்தி முன்னிலை வகித்தனர். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கி பேசினார். மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஸ்ரீமுஷ்ணம்

ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் செங்கோல் தலைமை தாங்கினார். மதர் டிரஸ்ட் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் வாசுராஜேந்திரன், லயன்ஸ் கிளப் பொருளாளர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் புனிதவள்ளி வரவேற்றார். லயன்ஸ் கிளப் தலைவர் டாக்டர் நிஷாந்த் தேசிய கொடியேற்றினார்.தொடர்ந்து மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சி நடந்தது.

காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார். முதல்வர் ஆனந்தவேலு, நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். எம்.ஆர்.கே. நினைவு அறக்கட்டளை தாளாளர் தெய்வசிகாமணி தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து கல்லுாரி வாளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை