உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் சுதந்திர தின சமபந்தி விருந்து 

கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் சுதந்திர தின சமபந்தி விருந்து 

கடலுார்: சுதந்திர தினத்தையொட்டி, கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்து நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., கலெக்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுதந்திர தினத்தையொட்டி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோவில் மகா மண்டபத்தில் நடந்த சுதந்திர தின சமபந்தி விருந்து நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., அய்யப்பன், மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கூடுதல் கலெக்டர்கள் ஆகாஷ், சரண்யா, இந்து சமய அறநிலையத்தறை உதவி ஆணையர் சந்திரன், கோவில் செயல் அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புதுப்பாளையம் ராஜகோபாலசுவாமி கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சமபந்தி விருந்து நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ