உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிலிண்டர் தீப்பிடித்த விபத்தில் காயமடைந்தவர் சாவு

சிலிண்டர் தீப்பிடித்த விபத்தில் காயமடைந்தவர் சாவு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஓட்டலில் காஸ் சிலிண்டர் தீப்பிடித்த விபத்தில் காயமடைந்தவர் நேற்று உயிரிழந்தார்.நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் எதிரே சத்யா என்ற ஓட்டலில், கடந்த 1ம் தேதி, உணவு சமைக்கும்போது காஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இந்த விபத்தில், ஓட்டல் ஊழியர்கள் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த சையது அகமது, அசரப்அலி, கற்பகம், விருதாம்பாள், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார், காராமணிக்குப்பம் வீரமுத்து, ராகவன் மகன் ராஜ்குமார் ஆகிய 7 பேர் காயமடைந்தனர்.இதில் வீரப்பன், சதீஷ்குமார் ஆகியோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், மற்றவர்கள் கடலூர் தனியார் மறுத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று வீரப்பன், 38; உயிரிழந்தார். இறந்த வீரப்பனுக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி