| ADDED : ஆக 21, 2024 07:38 AM
மாவட்டத்தில் கைத்தறி பட்டுக்கு பெயர்போன ஊர் போலீஸ் நிலையத்தில் பணிக்கு வருபவர்கள் மாறுதலாகி செல்ல விரும்பமாட்டார்கள். அந்த அளவிற்கு, உரிய மரியாதையும், 'ப' வைட்டமின் கவனிப்பும் இங்கு தாராளம். அதற்கேற்ப தற்போது பணியில் உள்ள பெண் இன்ஸ்பெக்டருக்கு ஏற்ற இடமாக அமைந்துவிட்டது. அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் தடையின்றி புழங்குகிறது.இதனை கண்காணிக்க, போலீசிலேயே சிலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த நபர்கள் போலீஸ் நிலையத்தில் ஆதிக்கம் செலுத்துவதால், போலீசாருக்குள் 'ஈகோ' பிரச்னை தலைதுாக்கியுள்ளது. குறிப்பாக போலீஸ் நிலையத்தில் அதிகாரம் மிக்கவரை, பதவிக்குரிய மரியாதை இல்லாமல் உதாசீனப் படுத்தியதால், அந்த நபர் விட்டால் போதும் என, விடுப்பு எடுத்து ஓட்டம் பிடித்துவிட்டார்.துடிப்புமிக்க சில போலீசாருக்கும் கடிவாளம் போடுவதால், பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மாவட்ட காவல் துறை உயர் அதிகாரி நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்