உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எள் சாகுபடி வயல்களை வேளாண் அதிகாரி ஆய்வு

எள் சாகுபடி வயல்களை வேளாண் அதிகாரி ஆய்வு

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பம் கிராமத்தில், கோடை பருவ எள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் வயல்களை கடலுார் வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை ஆய்வு செய்தார்.பின்னர், புலியூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வம்பன் - 11 உளுந்து விதை பண்ணையை ஆய்வு செய்தார். மண்வளம் காக்க மண் பரிசோதனை செய்வது அவசியம் என, அவர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.மேலும், மண் மாதிரி சேகரித்தல் மற்றும் அதன் வழிமுறைகள், கோடை உழவின் அவசியம், உழவன் செயலியின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குனர் மலர்வண்ணன், வேளாண் அலுவலர் வேல்முருகன், துணை வேளாண் அலுவலர் கரிகாலன், உதவி விதை அலுவலர் ஆறுமுகம், உதவி வேளாண் அலுவலர்கள் சிவக்குமார், கார்த்திக்கேயன், சத்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ