உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பேரமைப்பு தலைவர் மீது அவதுாறு; வணிகர் சங்கம் கண்டனம்

பேரமைப்பு தலைவர் மீது அவதுாறு; வணிகர் சங்கம் கண்டனம்

கடலுார் : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலுாரில் நடந்தது.நகர தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சீனுவாசன், பொருளாளர் முருகன், மாவட்ட இணை செயலாளர் சதீஷ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நகர இணை செயலாளர் சரவணன், பகுதி செயலாளர்கள் பக்கிரான், பாலாஜி, ரங்கநாதன்உட்பட பலர் பங்கேற்றனர்.இதுகுறித்து நகரத் தலைவர் துரைராஜ் கூறுகையில், 'தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, வணிர்களின் நலனுக்காக பாடுபடுகிறார். இந்த பேரமைப்பில் 45 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.விக்கிரமராஜாவின்செயல்பாடுகள்மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக சிலர் வீண் பழி சுமத்தி, வணிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றர். இது எடுபடாது. பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துக் கொள்வது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக' கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி