உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் இயற்கை வளங்கள் அழிப்பை கண்டித்து போராட்டம் சவுமியா அன்புமணி பேட்டி

கடலுாரில் இயற்கை வளங்கள் அழிப்பை கண்டித்து போராட்டம் சவுமியா அன்புமணி பேட்டி

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் இயற்கை வளங்கள், மரங்கள் அழிக்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கூறினார்.கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தபின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடலுார் மாவட்டத்தில் இயற்கை வளங்கள் அழிப்புக்கு எதிராக பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது மலையடிக்குப்பம் பகுதிகளில் முந்திரி மரங்கள் வெட்டப்படுவது குறித்து கட்சித் தலைவருடன் ஆலோசித்து போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை