உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 11ல் தடகள போட்டி பங்கேற்க அழைப்பு 

11ல் தடகள போட்டி பங்கேற்க அழைப்பு 

கடலுார் : கடலுார் மாவட்ட தடகள கழகம் சார்பில் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள விளையாட்டுப் போட்டி வரும் 11ம் தேதி காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. 14,16,18 மற்றும் 20 வயதுக்கு கீழ் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உட்பட பல்வேறு போட்டிகள் நடக்கிறது. இப்போட்டியில் மாவட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். போட்டியில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். இத்தகவலை மாவட்ட தடகள கழகத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை