| ADDED : மே 10, 2024 09:49 PM
மந்தாரக்குப்பம்: திருப்பயர் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி ஜனனி 496 மதிப்பெண்கள், கோபாலபுரம் ஜெயப்பிரியா பள்ளி மாணவி சாதனா 493, தொழுதுார் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவி சிவஸ்ரீ 492 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனர். மூன்று பேர் 490க்கு மேல், 22 பேர் 480க்கு மேல், 36 மாணவர்கள் 470க்கும் மேல், 60 மாணவர்கள் 460க்கும் மேல், 74 மாணவர்கள் 450க்கும் மேல், 135 பேர் 400க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றனர். ஆங்கிலத்தில் 8, கணிதத்தில் 51, அறிவியலில் 18, சமூக அறிவியலில் 18 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களை ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமங்களின் தலைவர் ஜெய்சங்கர், இயக்குனர் தினேஷ் ஆகியோர் வாழ்த்தினர். வடக்குத்து ஜெயப்பிரியா பப்ளிக் பள்ளி செயலாளர் சிந்து, பள்ளி முதல்வர் சிதம்பரி, திருப்பயர் ஜெயப்பிரியா பள்ளி முதல்வர் ரேவதி, கோபாலபுரம் ஜெயப்பிரியா பள்ளி முதல்வர் சுதர்சனா, தொழுதுார் கிரீன் பார்க் பள்ளி முதல்வர் மகேஸ்வரி, வடலுார் ஜெயப்பிரியா திரிபுநேனி வித்யாலயா முதல்வர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.