உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காராமணிக்குப்பம் சந்தையில் கருவாடு விற்பனை ஜோர்

காராமணிக்குப்பம் சந்தையில் கருவாடு விற்பனை ஜோர்

நெல்லிக்குப்பம், : காராமணிக்குப்பம் வாரச்சந்தையில் ரூ. 1 கோடி அளவிற்கு கருவாடு விற்பனையானது.நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில், திங்கள்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இங்கு, காய்கறிகள் பழங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கருவாடு விற்பனைக்கு பெயர்போன சந்தையாக உள்ளது. கருவாடு மற்றும் காய்கறிகள் வாங்க வாரந்தோறும் பல ஆயிரம் மக்கள் வருகின்றனர்.இங்கு, கடலூரில் இருந்து நாகப்பட்டினம் வரை உள்ள கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கருவாடு விற்பனைக்கு எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று அதிகாலை முதலே சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் அதிகளவு கருவாடு வாங்க வந்தனர். 30 வகைக்கு மேலான கருவாடுகள் விற்பனை செய்யப்பட்டன. நேற்று ஒருநாள் மட்டும், ரூ. 1 கோடி அளவிற்கு கருவாடு விற்பனையாகி இருக்கும் என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !