உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கருணாநிதி நுாற்றாண்டு விழா அமைச்சர் கணேசன் அழைப்பு

கருணாநிதி நுாற்றாண்டு விழா அமைச்சர் கணேசன் அழைப்பு

சிறுபாக்கம்,: விருத்தாசலத்தில் நடக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவில், தி.மு.க,. வினர் திரளாக பங்கேற்க, கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆலோசனைப்படி, கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா, நாளை (31ம் தேதி) விருத்தாசலம் பி.வி.பி., பள்ளி மைதானத்தில் எனது தலைமையில் நடக்கிறது.இதில், உணவு துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகிறார். மேலும், முனைவர் ராஜேந்திரன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், இயக்குனர் பழனியப்பன், பேச்சாளர் பர்வீன் சுல்தானா, எழுத்தாளர் இமையம், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., உட்பட பலர் பங்கேற்கின்றனர்.நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகள், சிறப்புகள் குறித்து நிகழ்ச்சி நடக்கிறது. இதில், தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், முன்னால், இன்னால் எம்.எல்.ஏ.,க்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை மற்றும் வார்டு செயலர்கள், அனைத்து சார்பு அணி மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொ.மு.ச., நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை