திட்டக்குடி: மங்களூர் ஒன்றியத்தில், கருணாநிதி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.மங்களூர் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் கல்லுார் கூட்டுசாலையில், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணாசங்கர் தலைமை தாங்கி, கருணாநிதி படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். தொழிலாளர் நலவாரிய செயற்குழு உறுப்பினர் சங்கர், கிளை செயலாளர் அருள், மாவட்ட பிரதிநிதி ராமதாஸ், வெங்கடேசன், ஒன்றிய துணைசெயலாளர் அழகுசாமி, ஒன்றிய பொருளாளர் பழனிவேல், இளைஞரணி துணை அமைப்பாளர் சித்திரவேல் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மரக்கன்றுகள் நடப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மங்களூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க.,சார்பில் ராமநத்தத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஒன்றியசெயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம் தலைமைதாங்கி, கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அயலக அணி மாவட்ட அமைப்பாளர் சேதுராமன், சிறுபான்மை நல உரிமைப்பிரிவு துணை அமைப்பாளர் அபூபக்கர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். சேத்தியாத்தோப்பு
சேத்தியாத்தோப்பு பெரியகுப்பம் அரசு தொடக்கப்பள்ளியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா பென்சில் வழங்கினர்.நிகழ்ச்சிக்கு, புவனகிரி மேற்கு தி.மு.க., ஒன்றிய செயலாளர் மதியழகன், அரசு வழக்கறிஞர் பழனிமனோகரன் தலைமை தாங்கினர். நிர்வாகி ரமேஷ் ஏற்பாடுகளை செய்து முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் வாசுகி, உதவி தலைமை ஆசிரியர் மாலா வரவேற்றனர். மகளிரணி அருளரசி, நல்லதம்பி, கொளஞ்சி, நீதி, சரவணன், வேல்முருகன், மெய்யழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.