உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதுநகர் கோவிலில் கிண்ணித் தேரோட்டம்

முதுநகர் கோவிலில் கிண்ணித் தேரோட்டம்

கடலுார் : கடலுார் முதுநகர் காமாட்சி அம்மன் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி கிண்ணித் தேரோட்டம் நடந்தது.விழாவையொட்டி, கடந்த 16ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினந்தோறும், அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகளும், பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடந்தது. 25ம் தேதி இரவு கிண்ணித் தேரோட்டம் நடந்தது.இதற்காக வெண்கலத்தாலான கிண்ணம், சலங்கைகள், மணிகளால் தேர் அலங்கரிக்கப்பட்டு, நள்ளிரவு 2:00 மணியளவில் தேரோட்டம் நடந்தது.அலங்கரிக்கப்பட்ட காமாட்சி அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கிளைவ் தெரு, இருசப்ப தெரு வழியாக தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை