உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.டி.சீயோன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

எஸ்.டி.சீயோன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி., சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.மாணவி சாருமதி 581 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடம், மாணவி நர்மதா 578 பெற்று இரண்டாம் இடம், லாவண்யா 568 பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தனர். கணிதத்தில் இரண்டு மாணவர்கள், விலங்கியலில் 4 பேர், தாவரவிய மற்றும் உயிரியியல், இயற்பியல் பாடத்தில் தலா 3 மாணவர்கள், கணிணி அறிவியல் ஒரு மாணவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் 60 மாணவர்கள் பெற்றனர்.சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் சாமுவேல் சுஜின், நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபாசுஜின், பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணிராஜ் பரிசு வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ