| ADDED : ஆக 23, 2024 12:39 AM
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே வீராணாநல்லுார் மாணிக்க நாச்சியார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேக பூஜைகள் கடந்த 21ம் தேதி தொடங்கியது. மாலை முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 22ம் தேதி அதிகாலை 5:45 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மற்றும் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு மேல் நாடி சந்தானம், மற்றும் இரண்டாம் கால பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடந்தது. 9:00 மணிக்கு யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, 9:30 மணிக்கு கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனர் வெங்கடேசன், ஞானாம்பிகை ஆகியோர் முன்னிலையில் கும்பாபிேஷகம் நடந்துது. திரளான பொதுமக்கள் தரிசனம் செய்தனர். கிராம தலைவர் பத்மநாபன், முன்னாள் ஊராட்சி தலைவர் திரிபுரசுந்தரி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஞானம், விஜயலட்சுமி, மற்றும் பலர் பங்கேற்றனர்.