உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிலம்பிமங்களம் கோவிலில் 21ம் தேதி கும்பாபிஷேகம்

சிலம்பிமங்களம் கோவிலில் 21ம் தேதி கும்பாபிஷேகம்

புதுச்சத்திரம் : சிலம்பிமங்களம் சிலம்பியம்மன் கோவில் கும்பாபிேஷகம் வரும் 21ம் தேதி நடக்கிறது.அதையொட்டி, நேற்று காலை பூஜைகள் துவங்கியது. இன்று (19ம் தேதி) காலை 6:00 மணிக்கு கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், சாந்திஹோமமும் மாலை முதற்கால யாகபூஜை, பூர்ணாஹூதி தீபாராதனையும் இரவு 8.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது.20ம் தேதி காலை 10:30 மணிக்கு யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. கும்பாபிேஷக தினமான 21ம் தேதி காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும் 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:30 மணிக்கு கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை