உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கள்ளச்சாராய பலி கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய பலி கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம், : விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விருதை பார் அசோசியேஷன் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். அட்வகேட் அசோசியேஷன் சங்கத் தலைவர் சதீஷ்குமார், செயலாளர் சுரேஷ்குமார், மூத்த வழக்கறிஞர் அம்பேத்கர், விருதை பார் அசோசியேஷன் சங்க செயலாளர் ரமேஷ், ராஜா முன்னிலை வகித்தனர்.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனைக்கு உறுதுணையாக இருந்த அனைத்துத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.வழக்கறிஞர்கள் புஷ்பதேவன், பொன்கொளஞ்சி, ஜெயப்பிரகாஷ், சிவக்குமார், கணேஷ், சிவசங்கர், சரவணன், கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தகண்ணன், மோகன், ராஜேஷ், வில்சன், செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ