உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லோக்சபா தேர்தல் 4 நாட்கள் டாஸ்மாக் மூடல்

லோக்சபா தேர்தல் 4 நாட்கள் டாஸ்மாக் மூடல்

கடலுார்: லோக்சபா தேர்தலையொட்டி, டாஸ்மாக், அனைத்து மதுபானக் கடைகள் நான்கு நாட்களுக்கு மூடப்படுகிறது.மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் அருண்தம்புராஜ் செய்திக்குறிப்பு:லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தேர்தல் சுதந்திரமாகவும், அமைதியாகவும் சுமூகமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு மதுபானங்கள் சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் வரும் 17ம் தேதி காலை 10:00 மணி முதல் ஓட்டுப்பதிவு நாள் 19ம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரையிலும் மற்றும் ஓட்டு எண்ணும் நாளான ஜூன் 4ம் தேதி ஆகிய நான்கு நாட்கள் மூடப்படுகிறது.மதுபானங்கள் விற்பனை செய்ய அரசு உரிமம் பெற்ற கேளிக்கை விடுதிகள், ஓட்டலுடன் இணைந்த பார்கள் போன்ற எப்.எல்-1 முதல் 11 வரை உள்ள அனைத்து மதுபான விற்பனை கடைகளும் மூடப்பட வேண்டும்.இதனை மீறி மதுபானம் விற்கும் கடைகள், கேளிக்கை பார் உரிமையாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை