| ADDED : ஏப் 23, 2024 06:09 AM
கடலுார், : சிதம்பரத்தில் மகாவீர் பிறந்தநாளையொட்டி, மகாவீர் சந்த் ஜெயின் அறக்கட்டளை சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.சிதம்பரம் மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை மற்றும் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் மகாவீர் ஜெயந்தி விழா மாலைக் கட்டித் தெரு ரோட்டரி சங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் நடனசபாபதி தலைமை தாங்கினார். மகாவீர் படத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பின்னர் ஜெயின் அறக்கட்டளை சாசன செயலாளர் தீபக்குமார், ரோட்டரி சங்க சாசன தலைவர் முகமது யாசின் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.நிகழ்ச்சியில் ஜெயின் அறக்கட்டளை தலைவர் கமல் கிஷோர் ஜெயின், அனிதா தீபக்குமார், மூத்த உறுப்பினர்கள் விஸ்வநாதன், பன்னாலால் ஜெயின், ராஜசேகர், வக்கீல் ஜெயபாண்டியன், கரிகால்வளவன், கேசவன், இன்ஜினியர் புகழேந்தி, தருண், சீனிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.சங்க பொருளாளர் அருள் நன்றி கூறினார்.