உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணிக்கவாசகர் குருபூஜை விழா

மாணிக்கவாசகர் குருபூஜை விழா

சிதம்பரம், : சிதம்பரத்தில்,மாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா மற்றும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.சிதம்பரம் தில்லை திருப்பெருந்துறை, மாணிக்கவாசகர் பர்ண சாலை, திருப்பாற்கடல் மடம், யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் சன்னதியில், மாணிக்கவாசகர் திருவாசகம் சொல்ல, சிவபெருமான் தன் கைப்பட எழுதிய இடத்தில், நேற்று மாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா நடந்தது.காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 வரையில் நடந்த குருபூஜையில், திருவாசகம் முற்றோதல் நடந்தது.தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தேறியது,இதில் சிதம்பரம், கடலுார், சேலம், ஈரோடு, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிவ பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, ஆத்மநாதர் கோவிலில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.ஏற்பாடுகளை கோவில் ட்ரஸ்ட்டி பசவராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை