| ADDED : மே 02, 2024 06:28 AM
கடலுார், : கடலுாரில் மே தினத்தையொட்டி, பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் கொடியேற்றும் விழா நடந்தது.கடலுார் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின கொடியேற்றும் விழா நடந்தது. மண்டல செயலாளர் நவநீத கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் கொடியேற்றினார். ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன், பணிமனை செயலாளர் பாலமுருகன், பணிமனை தலைவர் கதிர்வேல் கலந்து கொண்டனர்.கடலுார் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலக வளாகத்தில், தொ.மு.ச., சார்பில் சங்க தலைவர் ராமநாதன் கொடி ஏற்றினார். செயலாளர் ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் சிங்காரவேலனார் சிலைக்கு, தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் மாவட்ட தலைவர் சுப்புராயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயலாளர் மாலைமணி, இளைஞர் பேரவை தலைவர் வீரமுத்து, இணை செயலாளர் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள், துாய்மை காவலர்கள் சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நடந்தது. மாவட்டத் தலைவர் சாமிதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் பரமசிவம், மாநிலத் தலைவர் செல்வம் கலந்து கொண்டு கொடியேற்றினர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில், கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில், சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் கொடியேற்றினார்.