உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

ஸ்ரீமுஷ்ணம்: தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீஆதிவராகநல்லுாரில் நடந்த முகாமில், சென்னை நோய் நிகழ்வியல் அலுவலர் டாக்டர் ராஜாராமன் ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து ஸ்ரீஆதிவராகநல்லுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. கால்நடை மண்டல இணை இயக்குனர் பொன்னம்பலம், கடலுார் மாவட்ட நோய் நிகழ்வியல் அலுவலர் சுந்தரம், சிதம்பரம் கோட்ட உதவி இயக்குனர் கமலக்கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு முகாமை ஆய்வு செய்தனர். இதில் ஸ்ரீமுஷ்ணம் கால்நடை மருத்துவர் கார்த்திகேயன், ஆய்வாளர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை