உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நுண் உரமாக்கும் பணிகள்; மண்டல இயக்குனர் ஆய்வு

நுண் உரமாக்கும் பணிகள்; மண்டல இயக்குனர் ஆய்வு

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சியில் மறுசுழற்சி முறைகள் குறித்து செங்கல்பட்டு மண்டல இயக்குனர் சித்ரா ஆய்வு செய்தார்.விருத்தாசலம் நகராட்சி 33 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள், காய்கறி மார்க்கெட், இறைச்சி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் மக்கும் மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்து, நுண் உரமாக மாற்றும் பணி நடக்கிறது.விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடியில் இயங்கும் நகராட்சி குப்பைக் கிடங்கில் நடந்து வரும் இப்பணியை,செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சித்ரா நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மலக்கசடு சுத்திகரிப்பு, நுண் உரமாக்கல், மறுசுழற்சி பொருட்கள் மையத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கையாளுதல் மற்றும் செழிப்பு உரம் விற்பனை உள்ளிட்ட திட்டப் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, உரமாக்கும் திட்டத்தின் கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போது, கமிஷனர் (பொறுப்பு) ப்ரீத்தி, சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் ஷகிலா பானு உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி