உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நவீன உடற்பயிற்சி கூடம் பாழ்: சீரமைக்க நடவடிக்கை தேவை

நவீன உடற்பயிற்சி கூடம் பாழ்: சீரமைக்க நடவடிக்கை தேவை

விருத்தாசலம் : கம்மாபுரத்தில் பாழாகி வரும் அம்மா உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்மாபுரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதர நிலையம், ஒன்றிய அலுவலகம், அரசு மேல்நிலை பள்ளி, போலீஸ் ஸ்டேஷன், சார் பதிவாளர் அலுவலங்கள் உள்ளன. இந்நிலையில், கிராமத்தில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், போலீஸ் ஸ்டேஷன் அருகே அம்மா உடற்பயிற்சி கூடம் கட்டி திறக்கப்பட்டது.இதில், நவீன உடற்பயிற்சி சாதனங்கள், சிறுவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒருசில மாதங்களே பயன்பாட்டில் இருந்த உடற்பயிற்சி கூடம் முன்அறிவிப்பின்றி பூட்டப்பட்டது.இதனால், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களும் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது. மேலும், உடற்பயிற்சி கூட வளாகத்தில் முட்புதர்கள் மண்டியுள்ளது. மேலும், நவீன உடற்பயிறசி உபகரணங்கள் துருபிடித்து பாழாகி வருகிறது.எனவே, கிராம இளைஞர்கள், சிறுவர்கள், மாணவர்கள் நலன் கருதி, பாழாகி வரும் உடற்பயிற்சி கூடத்தை சீமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி