உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மருமகளை கண்டுபிடித்து தரக்கோரி மாமியார் புகார் பேரக்குழந்தைகளுடன் தவிப்பு

மருமகளை கண்டுபிடித்து தரக்கோரி மாமியார் புகார் பேரக்குழந்தைகளுடன் தவிப்பு

திட்டக்குடி : ராமநத்தம் அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மருமகளை மீட்டுதரக்கோரி மாமியார் போலீசில் புகார் செய்துள்ளார்.கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த கல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன் மனைவி ராணி,65. இவரது மகன் அரிகிருஷ்ணனுக்கும், இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகள் சரிதா என்பவருக்கும், கடந்த 2013ம் ஆண்டு திருமணமாகி, இரண்டு பெண்குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சரிதா, வேறொரு நபருடன் சென்றுவிட்டதாக தெரிகிறது. அவரை கண்டுபிடித்து அழைத்து வர அரிகிருஷ்ணனும் முயற்சி செய்யவில்லை.தனக்கு வயதாகிவிட்டதால் பெண்குழந்தைகளை பராமரிக்க முடியாததால் சரிதாவை மீட்டு தரக்கோரி, ராணி புகார் செய்துள்ளார். இதன் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி