உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்மோட்டார் ஒயர் திருட்டு

மின்மோட்டார் ஒயர் திருட்டு

திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த நெய்வாசல் கிராமத்தில் மின்மோட்டார் மற்றும் ஒயர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.திட்டக்குடி அடுத்த நெய்வாசல் கிராமத்தில் கடந்த மாதம் விஜயா என்பருக்குச்சொந்தமான மின்மோட்டார் திருடு போனது. அதேபோல் அதே கிராமத்தைச்சேர்ந்த பழனிவேல், முத்துசாமி, செல்வராசு, வினோத்குமார் ஆகியோரது மின்மோட்டார்களில் இருந்த ஒயர் திருடுபோனது. சில தினங்களுக்கு முன்பு இளவரசன் என்பவரது மின்மோட்டார் ஒயர் திருடு போனது. தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் செயல்படும் மர்மநபர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை