உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குண்டும், குழியுமான பரவனாறு பாலம் வாகன ஓட்டிகள் கடும் அவதி 

குண்டும், குழியுமான பரவனாறு பாலம் வாகன ஓட்டிகள் கடும் அவதி 

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த கரைமேடு மருவாய்க்கும் இடையே உள்ள பரவனாறு பாலம் பழுதாகி குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சென்னை - கும்பகோணம் சாலையில் கரைமேடு மருவாய்க்கும் இடையே பரவனாறு பாலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.இந்த பாலத்தின் வழியாக சென்னை, புதுச் சேரி, தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, அரியலுார், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள், வேன்கள், டாரஸ் லாரிகள் உள்ளிட்ட பல்வேறு கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன.பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும், பாலத்தில் போடப் பட்டுள்ள சாலையும் பழுதாகி ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது.வி.கே.டி., சாலை பணிகளுக்காக கனரக வாகனங்கள் மண் லோடும், ஜல்லிகளும் ஏற்றிச் செல்லவதால் பாலம் மிகவும் பலவீனமடைந்து வருகிறது.பாலத்தின் அருகே புதிய பாலம் கட்டுமானப்பணிகள் படு மந்தமாக நடைபெற்று வருகிறது. எனவே, சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் தற்போது பயன்பாட்டில் உள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும். அல்லது புதிதாக கட்டும் பாலம் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை