உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகராட்சி அலட்சியம்; சாலை பணி பாதிப்பு

நகராட்சி அலட்சியம்; சாலை பணி பாதிப்பு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் நகராட்சி சார்பில் சாலை அளந்து கொடுக்காததால், விரிவாக்கப்பணி பாதிக்கப்பட்டுள்ளது.நெல்லிக்குப்பம் நகரத்தில் இருந்து கீழ்அருங்குணம் வரை சாலை விரிவாக்க பணி நடக்கிறது. அதில், நகராட்சி பகுதியான ஆலை ரோட்டில் ஆக்கிரமிப்பு இடத்தை அளந்து தரும்படி நகராட்சி சர்வேயருக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், 15 நாட்களுக்கு மேல் ஆகியும், நகராட்சி சர்வேயர் பணியை செய்யாமல் அலட்சியமாக உள்ளார். இதனால், சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், சம்மந்தப்பட்ட இடம் நகராட்சி பகுதியாக இருப்பதால் அந்த சர்வேயர் தான் அளந்து தர வேண்டும். அவர் அளந்து கொடுத்தால் உடனடியாக சாலை பணியை முடித்துவிடுவோம் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ