உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாயமான இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்

மாயமான இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்

விருத்தாசலம்: கம்மாபுரம் அருகே மாயமான பெண், காதலனை திருமணம் செய்து கொண்டு போலீசில் தஞ்சமடைந்தார்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோ.ஆதனுாரை சேர்ந்த சரவணன் மகள் சரிதா, 19. விருத்தாசலத்தில் தனியார் கல்லுாரியில் டிப்ளமோ இரண்டாமாண்டு படித்துவந்தார். நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்றவரை காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சரவணன் கொடுத்த புகாரில், கம்மாபுரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தார்.அதில், அரியலுார் மாவட்டம், வி.கைகாட்டி அடுத்த மண்ணுழி கிராமத்தை சேர்ந்த ஹிட்டாச்சி டிரைவரான மதியழகன் மகன் ரவிக்குமார், 22, என்பவருடன், சரிதாவுக்கு இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அரியலுார் அடுத்த கல்லங்குறிச்சி கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.பின்னர், அரியலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ரவிக்குமார், சரிதா தம்பதி தஞ்சமடைந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, காதல் தம்பதியை அழைத்து வந்து விசாரிக்க, கம்மாபுரம் போலீசார் அரியலுார் விரைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ