உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நந்தப்பாடி வெள்ளாற்றில் பாலம் 20 கிராம மக்கள் எதிர்பார்ப்பு

நந்தப்பாடி வெள்ளாற்றில் பாலம் 20 கிராம மக்கள் எதிர்பார்ப்பு

பெண்ணாடம், - நந்தப்பாடி வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என 20 கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.பெண்ணாடம் அடுத்த நந்தப்பாடி - மோசட்டை இடையே செல்லும் வெள்ளாற்றை கடந்து, அரியலூர் மாவட்டம், புக்குழி, ஆலத்தியூர், முதுகுளம், ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, கோட்டைக்காடு, ஓலையூர், ஆன்டிமடம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். இதேபோன்று பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, அரியராவி, பெ.பூவனூர், நந்தப்பாடி, தீவளூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆற்றைக் கடந்து ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், அரியலூர் பகுதிகளுக்கு செல்கின்றனர். மழை காலங்களில் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்து துண்டிக்கப்படும்.இதனால் ஆற்றில் தண்ணீர் குறையும் வரை கடலுார், அரியலுார் இருமாவட்ட கிராம மக்கள் கருவேப்பிலங்குறிச்சி மேம்பாலம் வழியாக 20 கிலோ மீட்டர் துாரம் சுற்றி பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி, ஆண்டிமடம், அரியலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இதனால் கால விரயம் ஏற்படுவதால் இரு மாவட்ட மக்கள் அவதியடைகின்றனர். எனவே, நந்தப்பாடி - மோசட்டை இடையே வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என இருமாவட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை