உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருஷ்ணசாமி கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்

கிருஷ்ணசாமி கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்

கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியல் பிரிவு சார்பில, ் 2023-24ம் ஆண்டிற்கான கணினி தொடர்பியல் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி தாளாளர் ராஜேந்திரன், செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினர். புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியல் துறை தலைவர் குணசுந்தரி கலந்து கொண்டு, கணினி, தொலைத் தொடர்பியலின் புதுமையான தொழில்நுட்ப படைப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கல்லுாரி முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினர். இதில், பல்வேறு பொறியியல் கல்லுாரிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை துறைத் தலைவர் செந்தாழை மற்றும் பேராசிரியைகள் சுதா, நிர்மலா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை