உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசிய மாணவர் படை வீனஸ் பள்ளியில் துவக்கம் 

தேசிய மாணவர் படை வீனஸ் பள்ளியில் துவக்கம் 

சிதம்பரம் : சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் தேசிய மாணவர் படை துவக்கம் மற்றும் பதவியேற்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் குமார், இணை தாளாளர் ரூபியால் ராணி தலைமை தாங்கினர். என்.சி.சி., கமாண்டிங் ஆபிசர் கர்னல் வாசுதேவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேசிய மாணவர் படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர், தேசிய மாணவர் படை கொடியேற்றி, மாணவர் படையை துவக்கி வைத்தார். என்.சி.சி., அலுவலர் பைனஸ், பழனிப்பன், ஆசிரியர் சுந்தரலிங்கம், பாலதண்டாயுதபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.என்.சி.சி., மாணவர்களுக்கு கர்னல் வாசுதேவன் 'பரே' அணிவிக்க, பதவியேற்றனர். பள்ளி முதல்வர் நரேந்திரன், அலுவலர் ரூபி கிரேஸ் போனிகலா ஏற்பாடுகளை செய்திருந்தனர். என்.சி.சி., ஆசிரியர் ரஞ்சித் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி