உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்னாள் முதல்வர் கருணாநிதி கொடியேற்றிய கம்பத்தை புதுப்பித்து மீண்டும் பயன்படுத்த முடிவு நெல்லிக்குப்பம் தி.மு.க., தொண்டர்கள் மகிழ்ச்சி

முன்னாள் முதல்வர் கருணாநிதி கொடியேற்றிய கம்பத்தை புதுப்பித்து மீண்டும் பயன்படுத்த முடிவு நெல்லிக்குப்பம் தி.மு.க., தொண்டர்கள் மகிழ்ச்சி

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொடியேற்றிய கம்பத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் கணேசன் கொடியேற்றுகிறார்.நெல்லிக்குப்பத்தில் 1998 ஆம் ஆண்டு நடந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும் தற்போதைய தோல் பொருட்கள் தொழிலாளர் நலவாரிய தலைவருமான புகழேந்தி திருமணத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார். அப்போது மாருதி நகர் அருகே முக்கிய சாலையோரம் கல்வெட்டு அமைத்து கம்பத்தில் கருணாநிதி கொடியேற்றினார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அந்த கொடிகம்பத்தை பராமரிக்காமல் இருந்தனர்.இந்நிலையில் சேர்மன் ஜெயந்தி,பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அறிவுறையின் பேரில் இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா அந்த கொடிகம்பத்தை புதுப்பித்துள்ளார்.கருணாநிதி பிறந்த நாள் நுாற்றாண்டு நிறைவு நாள் விழாவை முன்னிட்டு கருணாநிதியால் கொடியேற்றப்பட்ட அதே கம்பத்தில் கொடியேற்ற முடிவு செய்துள்ளனர்.அமைச்சர் கணேசன் கட்சி கொடியேற்றுகிறார்.இதற்கான ஏற்பாடுகளை சேர்மன் ஜெயந்தி,தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, மாவட்ட பிரதிநிதிகள் வேலு,வீரமணி, கதிரேசன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா செய்து வருகின்றனர். கருணாநிதியால் கொடியேற்றப்பட்ட கம்பத்தை புதுப்பித்து மீண்டும் கொடியேற்றுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை