உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களால் நிரம்பி வழியும் நெட் சென்டர்கள்

மாணவர்களால் நிரம்பி வழியும் நெட் சென்டர்கள்

நடுவீரப்பட்டு : மாணவர்கள் படையெடுப்பால் அனைத்து நெட்சென்டர்களும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களது மேல் படிப்பிற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க நெட் சென்டரில் குவிந்து வருகின்றனர்.மேலும் தங்களது மேல் படிப்பிற்கு விண்ணப்பிக்க தேவையான ஜாதி, வருமானம், முதல் பட்டதாரி, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நெட் சென்டருக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் நெட் சென்டர்கள் அனைத்தும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை