உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில்வே தொழிலாளர்கள் நுாதன போராட்டம்

ரயில்வே தொழிலாளர்கள் நுாதன போராட்டம்

கடலுார்: கடலுாரில் ரயில்வே தொழிலாளர்கள் பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த கோரி காலை, மதியம், மாலை என நுாதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.மத்திய அரசு ரயில்வே தொழிலாளர்களின் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, கேரண்டியுடன் கூடிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, கடலுார் தென்னக ரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில், கடலூர் துறைமுகம் ரயில் நிலையம் முன்பு நேற்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை, மதியம், மாலை என மூன்று வேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.எஸ்.ஆர்.எம்.யூ., சங்க கடலுார் செயலாளர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் தயாளன் நிர்வாகிகள் இருதயராஜ், பிரசாத், மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.சங்க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை