| ADDED : மே 30, 2024 05:52 AM
நெய்வேலி: நெய்வேலியில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.நெய்வேலி ஆர்ச் கேட் அருகே என்.ஜே.வி., நகரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 60 சவரன் நகைகள் சமீபத்தில் திருடு போனது. நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்கு பதிந்து விசாரித்து வந்தார். அதில், புவனகிரி அருகே எல்லைக்குடி கிராமத்தை சேர்ந்த ராமர் ராஜசேகர், 33; என்பவர், திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்து 30 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.ராஜசேகர் மீது ஏற்கெனவே அடிதடி மற்றும் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதையடுத்து, ராஜசேகரின் தொடர் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் அருண் தம்புராஜிக்கு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரை செய்தார்.அதன்பேரில், ரவுடி ராஜசேகரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல், கடலுார் மத்திய சிறையில் உள்ள ராஜசேகரிடம் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கினர்.