உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., சுரங்க தொழிலாளி கன்வேயர் பெல்ட்டில் சிக்கி பலி

என்.எல்.சி., சுரங்க தொழிலாளி கன்வேயர் பெல்ட்டில் சிக்கி பலி

மந்தாரக்குப்பம்:கடலுார் மாவட்டம், தெற்குவெள்ளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன், 50, என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளி. இவர், நேற்று முன் தினம் காலை 9:30 மணிக்கு இரண்டாம் சுரங்கம் டாப் பெஞ்சில் நிலக்கரி எடுத்து செல்லும், கன்வேயர் பெல்ட் பகுதியில் பணியில் இருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கன்வேயர் பெல்ட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.அவரது உடலை மீட்டு, என்.எல்.சி., ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு துாக்கி செல்ல முயன்றனர். அதை அறிந்த அன்பழகனின் உறவினர்கள் காலை 10:30 மணிக்கு என்.எல்.சி., இரண்டாம் சுரங்க நுழைவாயிலில் திரண்டு, ஆம்புலன்சை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த என்.எல்.சி., அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், அன்பழகன் குடும்பத்திற்கு உரிய நிவாரண தொகை மற்றும் வேலை வழங்குவதாக உறுதியளித்தனர். அதையேற்று காலை 11:30 மணிக்கு உறவினர்கள் கலைந்து சென்றனர். அன்பழகன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை