உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாடியில் இருந்து விழுந்த என்.எல்.சி., தொழிலாளி சாவு

மாடியில் இருந்து விழுந்த என்.எல்.சி., தொழிலாளி சாவு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே மாடியில் மொபைல் போனில் பேசியபோது தவறி விழுந்த என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார்.பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சிவமணி,36; என்.எல்.சி., யில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி 4 ஆண்டு ஆகிறது. கலைவாணி என்ற மனைவி உள்ளார்.இவர், நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு வீட்டு மாடியில் மொபைலில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மாடியில் இருந்து கிழே விழுந்துள்ளார். உடனடியாக அக்கம், பக்கத்தினர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிவமணியை கொண்டு போய் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சிவமணி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை