உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மீன் சந்தையில் அதிகாரிகள் ஆய்வு

மீன் சந்தையில் அதிகாரிகள் ஆய்வு

வடலுார் : குறிஞ்சிப்பாடி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுந்தரமூர்த்தி, மீன்வளத்துறை ஆய்வாளர் விஷ்வந்த், ஆகியோர் கொண்ட குழுவினர், வடலுார் அய்யன் ஏரி, உழவர் சந்தை மற்றும் மீன் சந்தை ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அப்போது, ரசாயனம் பயன்படுத்தி மீன்கள் பதப்படுத்தப்படுகிறதா, கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். ஆய்வின் போது கெட்டுப்போன 5 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.மேலும், மீன் மார்க்கெட்டை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும், மீன்களை ஐஸ் மட்டுமே வைத்து பதப்படுத்த வேண்டும். எந்த ரசாயன பொருள்களையும் பயன்படுத்தக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, வியாபாரிகள் எச்சரிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ